வாழைப்பழ சேமியா
இனிப்பு வகை
Ingredients
- சேமியா 200 கிராம்
- நெய் 25 கிராம்
- முந்திரி பருப்பு 10 கிராம்
- உப்பு 1 சிட்டி கை
- தேங்காய் பால் 1 டம்ளர்
- 2 வாழைப்பழம்
- நாட்டு சக்கரை 4 ஸ்பூன்
Steps
ஒரு பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
அதில் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
அதில் 200 கிராம் சேமியா சேர்க்கவும்
சேமியா முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டியில் வடித்து விடவும்
வடித்த சேமியாவில் இரண்டு தம்ளர் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வடிகட்டியில் நன்றாக தண்ணீரை வடித்து விடவும்
வடித்த சேமியாவை பாத்திரத்தில் மாற்றவும்
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுக்கவும்
வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்
சேமியாவில் தேங்காய்ப் பால் 1 டம்ளர் சேர்க்கவும்
நாட்டுச்சக்கரை 4 ஸ்பூன் சேர்க்கவும்
வாழைப்பழம் நறுக்கியதை சேர்க்கவும்
நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்
வாழைப்பழ சேமியா தயார்
Source: Read Full Article